மாஸ்கோ: ஜார்ஜியாவில் ரஷ்யா வுக்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் ஜார்ஜியாவுக்கு தற்காலிகமாக விமானச் சேவை களை நிறுத்திவைக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். அதற்கு வகை செய்யும் ஆவணத்தில் திரு புட்டின் நேற்று கையெழுத்திட்டதாகவும் வரும் ஜூலை 8ஆம் தேதி அவரது உத்தரவு நடப்புக்கு வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.
ஜார்ஜியாவுக்கு சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யும் ரஷ்ய பயண முகவர்கள் தற்சமயம் பயண ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் தற்காலிகமாக அந்த ஏற்பாட்டை நிதுத்திவைக்கு மாறும் ரஷ்யா கேட்டுக் கொண் டுள்ளது.
ரஷ்யாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான செர்ஜெய் காவ்ரிலோ கடந்த வியாழக்கிழமை ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது உரைக்கு எதிர்ப்பு தெரி வித்து நாடாளுமன்றக் கட்டடத் திற்கு வெளியே வெள்ளிக்கிழமை திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜார்ஜியா வில் ரஷ்யா தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜார்ஜியா நாடாளுமன்ற சபாநாயகர் இராகிலி கோபாக்கிட்ஸ் பதவி விலகினார்.
ஆர்ப்பாட்டத்தை மோசமாகக் கையாண்டது தொடர்பில் ஜார்ஜியா உள்துறை அமைச்சர் ஜியோர்சி பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

