அன்வார்: பிரதமர் பதவி மாற்றம் உறுதியான ஒன்று

அன்வார்: பிரதமர் பதவி மாற்றம் உறுதியான ஒன்று

1 mins read

பெட்டாலிங் ஜெயா: பிரதமர் பதவியைத்தம்மிடம் ஒப்படைப்பது என்பது ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.

பிகே ஆர் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவி ஒப்படைப்பு என்பது திட்டமிட்டபடி நடந்தேறும் என்பதில் தமக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றார்.

"அவர் (டாக்டர் மகாதீர்) மிகவும் பெருந்தன்மை வாய்ந்த வெளிப்படையான மனிதர். எங்களுக்குள் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைப் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை," என்றார்.