வாஷிங்டன்: ஈரான் மீது இன்று திங்கட்கிழமை முதல் புதிய பொருளியல் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "திங்கட்கிழமை ஈரானுக்கு எதிராகக் கூடுதலான பெரும் தடைகளை விதிக்க இருக்கிறோம். ஆயினும் வளமான ஒரு நாடாக, பொருளியல் தடைகள் விலக்கப்பட்ட நாடாக ஈரான் மீண்டும் உருவெடுப்பதை நான் எதிர்பார்க்கிறேன்," என்றார;.
அதே நேரம் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் திட்டம் இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்றும் திரு டிரம்ப் கூறியிருந்தார். அது குறித்து அறிந்த பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஈரான் நெருக்கடிக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கி உள்ளன.

