வேலைநிறுத்தப் போராட்டத்தால் 640க்கும் அதிகமான விமானப் பயணங்கள் நிறுத்தம்

வேலைநிறுத்தப் போராட்டத்தால் 640க்கும் அதிகமான விமானப் பயணங்கள் நிறுத்தம்

1 mins read
31ac2287-0b31-4f5f-abd8-1cd3beeb3641
-

தைவானின் 'ஏவா ஏர்ஸ்' விமான நிறுவனத்தைச் சேர்ந்த 640க்கும் அதிகமான விமானப் பயணங்கள் நேற்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அந்நிறுவனத்திற்கு எதிராக அதன் தொழிற்சங்கம் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம் இந்தச் சேவைத் தடைக்குக் காரணம்.

நிறுவன நிர்வாகத்தினருக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான சம்பளத்தொகை குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

பயண நிறுத்தங்களால் 40,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.