பங்ளாதேஷில் கால்வாய்க்குள் விழுந்த ரயில்

பங்ளாதேஷில் கால்வாய்க்குள் விழுந்த ரயில்

1 mins read
3b0d83c1-18a8-4db1-8829-325bf25445e7
-

பங்ளாதேஷில் ரயில் ஒன்று காய்வாய்க்குள் விழுந்ததில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர். அத்துடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

டாக்கா நகரிலிருந்து 300 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மேம்பாலம் ஒன்றின் வழியாக அந்த ரயில் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பாலம் திடீன இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நான்கு ரயில் பெட்டிகள் தண்ணீருக்குள் விழுந்தனர்.

உயிரிழந்தோரையும் காயமடைந்தோரையும் நீரிலிருந்தும் ரயில் சிதைவுகளிலிருந்தும் மீட்க உள்ளூர் மக்கள் அதிகாரிகளுக்கு உதவியதாக போலிசார் தெரிவித்தனர்.