இந்தோனீசியாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்

இந்தோனீசியாவில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்

1 mins read
2e59fdb7-35a7-4a95-b790-454185987fb2
-

இந்தோனீசியாவிலுள்ள பண்டா கடலுக்கருகே 7.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஹவாயியில் தளம் கொண்டிருக்கும் பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் உயிர், பொருட்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரம் வரை உணரப்பட்டதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆயினும், சுனாமிக்கான அபாயம் இல்லை என்று கூறப்படுகிறது.