டோர்ட்மண்ட்: ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள லிம்பர்க் நகரில் இருக்கும் பார்லி வயலில் இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு ஒன்று நேற்று வெடித்துச் சிதறியது.
இந்த வெடிப்பின் காரணமாக வயலில் ஆழமான பள்ளம் ஏற்பட்டது என ஜெர்மன் போலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிசத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், வெடித்தது இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என்பதை உறுதி செய்தனர்.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

