இந்தோனீசியக் கடற்பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனீசியக் கடற்பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பண்டா கடலுக்கு அடியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.3 என பதிவான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 11.53 மணிக்கு அம்போன் தீவுக்குத் தெற்கில் 208 கிலோ மீட்டர் தூரத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் நிகழ்ந்ததால் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியது.

நிலநடுக்கம் காரணமாக காயமடைந்தோர் பற்றியோ சேதம் பற்றியோ தகவல் வெளியாகவில்லை.

இந்தோனீசியக் கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.