அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடிக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள்

அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடிக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள்

1 mins read
f8b3a598-1f60-4e53-abab-0cc5a677e331
-

மலேசியாவின் முன்னைய ஆளுங்கட்சியான அம்னோவின் தலைவர் சாஹிட் ஹமிடி, வெளிநாட்டு விசா அமைப்பு தொடர்பில் 40 புதிய ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இதன் தொடர்பில் அவர் இவ்வாரம் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று மலேசிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

முன்னாள் துணைப்பிரதமரான அவருக்கு எதிராக மொத்தம் 87 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். ஏற்கெனவே திரு ஹமிடி நம்பிக்கை மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் ஆகியவற்றின் தொடர்பில் 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளை மலேசியாவுக்குக் கொண்டுவரும் தனியார் நிறுவனத்தின் தொடர்பில் மலேசிய ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக திரு ஹமிடியை அழைத்ததாக முன்பு வெளிவந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்தாண்டின் பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரு ஹமிடி, திரு நஜிப்பிடமிருந்து அம்னோ தலைவர் பதவியை ஏற்றார். கட்சியின் தற்காலிகத் தலைவராகச் செயலாற்றும் முகம்மது ஹசான், அதன் அடுத்த தலைவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.