உணவுக் கழிவுப்பொருளால் செய்யப்பட்ட கண்டுபிடிப்பு; பினாங்கு மாணவர்களுக்கு விருது

இந்தோனீசியாவின் பாலி நகரில் அண்மையில் நிகழ்ந்த அனைத்துலக அறிவியல், புத்தாக்கக் கண்காட்சியில் நான்கு மாணவர்களுக்குத் தங்க விருது கிடைத்துள்ளது. 

ஹரிஷ் ராஜ் சங்கர், ஹர்ச்சனா சங்கையா, சித்தி சுமைடா, தேவதர்ஷினி சீகன் ஆகிய அந்த நான்கு மாணவர்கள், உணவுக் குப்பைப் பொருட்களை மறுபயனீடு செய்யும் கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

சீனப் புத்தாண்டின்போது  வீசி எறியப்பட்ட ஆரஞ்சு தோல், தேங்காய் ஓடுகள் ஆகியவற்றைத் தண்ணீர் வடிகட்டிகளாகவும் பற்பசையாகவும் உடலின் துர்நாற்றத்தை அகற்றும் சிறு பைகளாகவும் மாற்றுகிறது அந்தக் கண்டுபிடிப்பு.  அறிவியல் கண்காட்சி ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.