வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்

1 mins read
465b5a23-2fee-43fb-bd6f-1a2a19ca0b82
கஸக்ஸ்தானில் நேற்று தரையிறங்கிய விண்வெளி வீரர் ஆன் மெக்ளேனை தூக்கிச் செல்லும் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஃபுளோரிடா: அனைத்துலக விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மூன்று விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

கஸக்ஸ்தான் நாட்டின் ஷெளஸ்கஸ்கான் பகுதியில் விண்வெளி வீரர்கள் பத்திரமாக தரையிறங்கினர். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவைச் சேர்ந்த ஆன் மெக்ளேன், ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மசை சேர்ந்த கமாண்டர் ஓலெக் கோனொனென்கோ, கனடிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் டேவிட் செயிண்ட் ஜாக்ஸ் ஆகிய அந்த மூவரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

இந்தக் குழுவினர் அனைத்துலக விண்வெளி மையத்தில் 204 நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் அவர்கள் 3,264 முறை பூமியை வலம் வந்து, சுமார் 8.6 மில்லியன் மைல் தூரத்துக்குப் பயணித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.