வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்த வார இறுதியில் மேற்கொள்ளவிருக்கும் தென்கொரியப் பயணத்தின்போது அங்கு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை சந்திப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதை மேற்கோளிட்டுள்ளது.
ஜப்பானில் நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் இவ்வாரயிறுதியில் திரு டிரம்ப் தென்கொரியத் தலைநகர் சோலுக்கு செல்லவுள்ளார்.
அவரது இந்தப் பயணம், இரு கொரியாக்கள் இடையேயான எல்லையில் திரு டிரம்ப்பிற்கும் திரு கிம்மிற்கும் இடையே ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படலாம் என்ற ஊகங்கள் ஏற்கெனவே எழுந்தன.
ராணுவம் இல்லாத மண்டலத்திற்கு திரு டிரம்ப்பின் வருகை குறித்து கருத்து தெரிவித்த அந்த அமெரிக்க அதிகாரி, அதிபரின் முழுப் பயண விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறினார்.

