எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்

எம்ஏசிசி தலைவராக லத்தீஃபா கோயா பதவியேற்றார்

1 mins read
43c8323d-51e6-44f9-b94e-aba2330b9a9f
லத்தீஃபா கோயாவை எம்ஏசிசி தலைவராக நியமனம் செய்த கடிதத்தை மாமன்னர் சுல்தான் அப்துல்லா அவரிடம் வழங்குகிறார்.  படம்: பெர்னாமா -

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் லத்தீஃபா கோயா, 46, நேற்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவியேற்றார்.

இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஈராண்டு காலத்திற்கு 14வது எம்ஏசிசி தலைவராக நியமனம் செய்த கடிதத்தை மாமன்னர் சுல்தான் அப்துல்லா அவரிடம் வழங்கினார்.

2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டப் பிரிவு 5(7) கீழ் ஒவ்வொரு தலைமை ஆணையரும் மாமன்னர் முன்னிலையில் பதவியேற்க வேண்டும்.

முன்னதாக, எம்ஏசிசியின் முன்னாள் தலைவர் முகம்மது சுக்ரி அப்துல் தமது சேவையை முன்கூட்டியே முடித்துக்கொள்வதாக அறிவித்ததன் பேரில் லத்தீஃபா கோயாவை புதிய தலைவராக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது அண்மையில் நியமித்திருந்தார். திரு சுக்ரியின் பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிய இருந்தது.

லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளநிலை பட்டக் கல்வியை முடித்தவர் லத்தீஃபா.