'எம்ஏஎஸ்ஸை விற்றாலும் அதன் அடையாளத்தை காக்க வேண்டும்'

'எம்ஏஎஸ்ஸை விற்றாலும் அதன் அடையாளத்தை காக்க வேண்டும்'

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்) நிறுவனத்தை அரசாங்கம் விற்க நேர்ந்தாலும் அதன் அடையாளம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை எதிர்நோக்கும் எம்ஏஎஸ் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் அது தோல்வியில் முடிந்துள்ளதாக டாக்டர் மகாதீர் வருத்தம் தெரிவித்தார்.

"எனவே, இந்த முறை எம்ஏஎஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டும் போதாது. ஏராளமான அம்சங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்," என்றார் அவர்.

33வது ஆசிய பசிபிக் வட்ட மேசை மாநாட்டில் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை டாக்டர் மகாதீர் முன்வைத்தார்.