தடையை ஓரங்கட்டி ஹுவாவெய்க்கு விற்பனையைத் தொடரும் அமெரிக்க நிறுவனங்கள்

தடையை ஓரங்கட்டி ஹுவாவெய்க்கு விற்பனையைத் தொடரும் அமெரிக்க நிறுவனங்கள்

1 mins read
131fe7d9-df80-4753-be1e-ba237f5bb95d
-

அமெரிக்க நிறுவனங்கள் அரசாங்கத் தடையைப் பொருட்படுத்தாமல் ஹுவாவெய் நிறுவனத்திற்குத் தொடர்ந்து பொருட்களை விற்று வருகின்றன. அந்நாட்டின் வர்த்தக அமைச்சு அந்தத் தடையைக் கடந்த மாதம் செயல்படுத்தியபோதும் ஹுவாவெய்க்குத் தொடர்ந்து பொருட்களை விற்கும் வழியை அந்நிறுவனங்கள் கண்டுபிடித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் அமெரிக்க தயாரிப்புகளாக எப்போதும் கருதப்படாததால், அதனை அந்நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. இந்த விற்பனை, திறன்பேசிகள், இணையக் கட்டமைப்புகள் போன்றவற்றை விற்க ஹுவாவெய்க்குக் கைகொடுக்கிறது. அமெரிக்க அரசாங்கம் ஹுவாவெய் நிறுவனத்தைப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதியபோதும் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க சிரமப்படுகிறது. ஹுவாவெய் நிறுவனங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் இவ்வாறு 'பின்வழியாக' பொருள் விற்பனைகளைச் செய்து வருவது அமெரிக்க அரசாங்கத்திற்குத் தெரிந்தபோதும் இது குறித்து எத்தகைய பதில் நடவடிக்கை எடுப்பது என்பதில் அதிகாரிகள் இருமனதாக உள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்களிடம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 11 பில்லியன் வெள்ளி மதிப்பிலான பொருட்களை வாங்குவதாக ஹுவாவெய் தெரிவித்தது.