விபத்துக்குள்ளானவருக்கு பரிவு காட்டிய மாமன்னர்

விபத்துக்குள்ளானவருக்கு பரிவு காட்டிய மாமன்னர்

1 mins read
7f8688b6-676c-46a2-8be1-8f07ea1915e1
-

புத்ராஜெயாவில் விபத்தில் சிக்கிய மலேசிய வாகனமோட்டிக்கு உதவி செய்தார் அந்நாட்டின் மாமன்னர். பிரதமர் மாகதீர் முகம்மதுடன் காரில் சென்றுகொண்டிருந்த சுல்தான் அப்துல்லா ரியாட்டுடின் சந்திப்பு ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் விபத்துக்குள்ளான வாகனமோட்டியைக் கண்டார்.

ஓட்டுநருடன் மாமன்னர் பேசிக்கொண்டிருந்ததைக் காட்டும் படங்களை அவரது அரண்மனை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டது. குடிமகன் ஒருவனின்பால் மாமன்னர் வைத்திருந்த அக்கறை தங்களை நெகிழ வைத்ததாக மலேசியர்கள் கூறுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அவர் 'கேஎஃப்சி' விரைவு உணவுக்கடையில் மற்ற வாடிக்கையாளர்களைப் போல் வரிசையில் நின்று உணவு வாங்கக் காத்திருப்பதையும் பொதுமக்கள் கண்டனர்.