தாய்லாந்தில் ஜூலை மாதத்திற்குள் அரசாங்கம் அமைக்கப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சனோச்சா தெரிவித்திருக்கிறார். மார்ச் மாதம் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோதும் அந்நாட்டின் அமைச்சரவை இன்னும் அமைக்கப்படவில்லை.
அமைச்சர்களின் தகுதிநிலை ஆராயப்பட்டு வருவதாகத் திரு பிரயுத் தெரிவித்தார். ஜப்பானில் வரும் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு அமைச்சர் பட்டியல் உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டினால் முதலில் தாமதம் ஏற்பட்டது. ஆயினும் அமைச்சர்கள் இன்றி தாமே முழு அதிகாரங்களைக் கொண்டுள்ள இந்நிலையைத் திரு சனோச்சா வேண்டுமென்றே நீட்டிப்பதாக தாய்லாந்தின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

