மீன் வலையில் சிக்கிய முதலை

மீன் வலையில் சிக்கிய முதலை

1 mins read
de49adc7-064c-44de-aa1c-9ee4aa96a7d0
பாரந்தூக்கி மூலம் மீட்கப்பட்ட முதலை வனவிலங்கு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. படம்: மலேசிய ஊடகம் -
Google News Preferred Icon

கூச்சிங்: இறால் மீன்களைப் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையில் பெரிய முதலை ஒன்று சிக்கியது. மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள சுங்கை பாகோ ஆற்றில் நேற்றுக் காலை சிக்கிய அந்த பெண் முதலை சுமார் 3.6 மீட்டர் நீளமும் கிட்டத்தட்ட 200 கிலோ எடையும் கொண்டது.

45 நிமிட முயற்சிக்குப் பிறகு முதலையைக் கட்டிப்போட்டு கம்போங் பாகோ படகுத்துறைக்குக் கொண்டு வந்ததாக சரவாக் வனவியல் கழகத்தைச் சேர்ந்த வான் மஸ்லான் வான் மஜியான் கூறினார். பின்னர் அது மாத்தாங் வனவிலங்கு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்வாண்டில் இந்த ஆற்றில் சிக்கிய ஐந்தாவது முதலை இது.