அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் இரண்டாவது மாடியிலுள்ள தனது வீட்டுச் சன்னலிலிருந்து பெண் குழந்தை கீழே விழுந்தது. தக்க நேரத்தில் 17 வயது இளையர் ஃபௌஸி ஸபாட் குழந்தையைத் தாங்கிப் பிடித்ததால் அந்த இரண்டு வயது குழந்தை உயிர் தப்பியது.
துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லின் பஹ்தி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நேர்ந்தது. தன் முன் நடந்துகொண்டிருந்ததைச் சில நோடிகளிலேயே புரிந்துகொண்ட திரு ஸபாட், உடனே தமது கரங்களைக் குவித்துக்கொண்டு விழுகின்ற அந்தக் குழந்தையைத் தாங்கிப் பிடித்தார். குழந்தை எந்தக் காயமுமின்றி தப்பித்தது.
சம்பவம் நடந்த அதே தெருவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த திரு ஸபாட், தன்னால் இயன்றதை மட்டும் செய்ததாகக் கூறுகிறார். டோஹா என்ற அந்தக் குழந்தையின் தாயார் சமைத்துக்கொண்டிருந்தபோது அது சன்னலில் ஏறிக் கீழே விழுந்ததாக 'டெய்லி சபா' என்ற துருக்கிய செய்தித்தாள் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. இணையவாசிகளின் பாராட்டு மழை திரு ஸபாட் மீது பொழிந்தவண்ணம் உள்ளது.

