திமிங்கில வதைப்புக்குக் குரல்கொடுக்கும் ஜி20

திமிங்கில வதைப்புக்குக் குரல்கொடுக்கும் ஜி20

1 mins read
6591eeac-88d8-41f7-b541-818076b72bdb
-

ஜப்பானிய நகர் ஒசாகாவில் நடைபெறும் 'ஜி20' உச்சநிலை மாநாட்டின்போது, உலகெங்கிலும் இருந்து அங்கு ஒன்றுகூடிய சுற்றுப்புற ஆர்வலர்கள், திமிங்கில வதையைத் தடுக்க ஜப்பானுக்கு நெருக்குதல் அளிக்குமாறு உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் அதிகாரபூர்வமாக, வர்த்தகக் காரணங்களுக்காகத் திமிங்கில வேட்டையைத் தொடங்கியுள்ளது. அனைத்துலக திமிங்கில ஆணையத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை விலகும் ஜப்பான், அறிவியல் ஆராய்ச்சி என்ற போர்வையில் வர்த்தகக் காரணங்களுக்காகத் திமிங்கில வேட்டையை ஊக்குவித்து வருவதாக நீர்விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஜி20 மாநாட்டைப் பெருத்த ஆரவாரத்துடன் நடத்தும் ஜப்பான், திமிங்கில வதைத்தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து அமைதியாக வெளியேறுவதாக அனைத்துலக மனிதாபிமான சங்கத்தின் தலைவர் கிட்டி புளோக் தெரிவித்துள்ளார். இதனை உலகத் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

ஜப்பானில் திமிங்கிலங்கள் உணவாகக் கருதப்படுகின்றன. திமிங்கில வேட்டையின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே உள்ளார்.