வெற்றி அதிபர் விடோடோவுக்கே; இந்தோனீசிய நீதிமன்றம்

வெற்றி அதிபர் விடோடோவுக்கே; இந்தோனீசிய நீதிமன்றம்

1 mins read
eed3e072-6724-4541-8434-b4484d00ab3f
-

இந்தோனீசியாவின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், அந்நாட்டின் பொதுத்தேர்தல் முடிவுகளை நிலைநாட்ட முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி நிகழ்ந்த அந்தத் தேர்தலில் அதிபர் ஜோக்கோ விடோடோ வெற்றிபெற்று இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு அண்மை சில மாதங்களாக நீடித்து வந்த அரசியல் நிச்சயமின்மையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அதிபர் பதவியைக் கைப்பற்ற இரண்டாவது முறையாக முயன்ற ஜெனரல் பிரபோவோ சுப்பியாண்டோவின் முயற்சியை அந்தத் தீர்ப்பு முறியடித்தது. தேர்தலில் பெருமளவு மோசடி நடந்ததாக அவரும் துணை அதிபர் வேட்பாளரான சண்டியாகா உனோவும் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

இந்தத் தீர்ப்பால் தமக்கு வருத்தம் ஏற்பட்டாலும் அதற்கு உடன்படுவதாகத் திரு பிரபோவோ நேற்றிரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.