ஷெரின் கொலை வழக்கு: வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை

ஷெரின் கொலை வழக்கு: வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை

2 mins read

டெக்சஸ்: தத்தெடுத்த மூன்று வயது பெண் குழந்தையைக் கொன்ற குற்றத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆடவருக்கு அந்நாட்டு நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தமது பாதுகாப்பில் இருந்த குழந்தைக்குத் தீங்கு ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளத் தவறியதாக வெஸ்லி மேத்யூஸ் ஒப்புக்கொண் டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்று வயது ஷெரின் மேத்யூஸைக் காணவில்லை என 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டெக்சஸ் போலிசிடம் புகார் செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஷெரின் மேத்யூஸைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பால் குடிக்காததற்குத் தண்டனை யாக ஷெரினை வீட்டிற்கு வெளியே நிற்கவைத்தாகவும் அதை அடுத்து குழந்தையைக் காணவில்லை என்றும் வெஸ்லி மேத்யூஸ் முதலில் கூறியிருந்தார்.

விசாரணையின்போது அவரது வாக்குமூலம் மாறிக் கொண்டே இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்கள் கழித்து, சாக்கடையின் நுழைவாயிலில் ஷெரினின் சடலம் கண்டெடுக்கப் பட்டதை அடுத்து ஷெரின் பால் குடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவளது தொண்டைக்குள் பால் அடைத் துக்கொண்டதாக வெஸ்லி கதையை மாற்றினார். ஆனால் இதை ஏற்க அரசாங்க தரப்பு வழக்கறிஞர்கள் மறுத்தனர். ஷெரினை வெஸ்லி கொன்றதாக அரசாங்க வழக்கறிஞர் ஷேரி தாமஸ் தெரிவித்தார்.

"அவர் அந்தக் குழந்தையைக் கொன்றுவிட்டார். கொலை செய்த பிறகு பதற்றம் அடைந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள கதை கட்டி அனைவரையும் நம்ப வைத்தார்," என்று திருவாட்டி தாமஸ் கூறினார்.

2016 ஆண்டில் இந்தியாவில் இருந்த ஷெரினை வெஸ்லி தத்தெடுத்துக்கொண்டதாக தெரி விக்கப்பட்டது.

குழந்தையைக் கைவிட்டதாக வெஸ்லியின் மனைவி சினி மேத்யூஸ் மீது முதலில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர் விடுவிக் கப்பட்டார்.

வெஸ்லிக்கும் சினிக்கும் பிறந்த பெண் குழந்தையை அவர் களது சொந்தக்காரர்கள் வளர்த்து வருகின்றனர். அக்குழந்தை வெஸ்லி, சினி ஆகியோருடன் முன்பு வசித்தபோது அதைக் காணவில்லை என்று புகார் செய்யப்பட்டது. குழந்தை கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து சொந்தக்காரர்களிடம் ஒப்படைப் பதற்கு முன்பு வளர்ப்புப் பெற்றோ ரிடம் அது வளர்ந்து வந்தது.

ஷெரின் கொலை வழக்கைத் தொடர்ந்து ஷெரினைத் தத்தெ டுக்க ஏற்பாடுகள் செய்த ஹோல்ட் இன்டர்நேஷனல் முகவையை இந்திய அரசாங்கம் தகுதிநீக்கம் செய்துள்ளது. வெஸ்வி, சினி மேத்யூஸைப் பற்றி நன்கு விசாரிக் காமல் ஷெரினை அவர்களுக்கு தத்துக்கொடுத்த அந்த முகவை யை இந்திய அரசாங்கம் சாடியது.