ஹாங்காங்: குற்றங்கள் தொடர்பாக சீனா கேட்கும் நபர்களை ஹாங்காங்கிலிருந்து அங்கு நாடுகடத்த வகை செய்யும் மசோதாவை எதிர்த்து இம்மாதத் தொடக்கத்திலிருந்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சர்ச்சைக்குரிய மசோதாவை ரத்து செய்யக் கோரி ஹாங்காங்கில் நேற்று முன்தினம் லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஹாங்காங் போலிஸ் தலைமையகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று காலை முற்றுகையிட்டனர்.
இதன் காரணமாக தலைமை யகத்தைவிட்டு போலிஸ் அதிகாரி களால் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஹாங்காங்கில் நேற்று அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஜப்பானில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சநிலை மாநாட்டின்போது இந்தச் சர்ச்சைக்குரிய மசோதா குறித்து அதில் கலந்துகொள்ளும் தலைவர்கள் கலந்துரையாட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வான் சாய் வட்டாரத்தில் உள்ள போலிஸ் தலைமையகத்துக்குப் படை எடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரத் தடுப்புப் போலிஸ் படையினருடன் மோதினர்.
ஹாங்காங்கில் உள்ள அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள இந்த போலிஸ் நிலையத்தைச் சுற்றி உள்ள மூன்று பிரதான சாலைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகை யிட்டனர்.
"ஆர்ப்பாட்டம் நடத்தியோரின் செயல் போலிஸ் அதிகாரிகளின் பணியை வெகுவாகப் பாதித் துள்ளது.
"அவர்களால் பொது மக்களுக்கு அவசரகால சேவை களை வழங்க முடியாமல் போனது," என்று ஹாங்காங் போலிஸ் படை நேற்று பிற்பகல் அறிக்கை வெளியிட்டது.
உதவி கேட்டு கிட்டத்தட்ட 18 அழைப்புகள் வந்ததாகவும் ஆனால் முற்றுகையின் காரண மாக போலிசாரால் எதுவும் செய்ய முடியாமல் போனதாகவும் தெரி விக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்த தால் இரவு நேரப் பணிக்கு வர இருந்த போலிஸ் அதிகாரிகளால் தலைமையகத்துக்குள் நுழைய முடியாமல் போனதாகக் கூறப் படுகிறது.

