துனீசியாவில் தற்கொலைத் தாக்குதல்; ஐவர் காயம்

துனீசியாவில் தற்கொலைத் தாக்குதல்; ஐவர் காயம்

1 mins read

துனீஸ்: துனீசியத் தலைநகர் துனீஸில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் போலிஸ் அதிகாரி ஒருவர் மாண்டார்.

இரண்டு பேரால் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்கு தல்களில் பலர் காயமுற்றதாக துனீசிய அரசாங்கம் தெரிவித்தது.

சுற்றுப்பயணிகள் பலர் துனீசி யாவுக்குப் பயணம் மேற்கொண் டிருக்கும் இக்காலகட்டத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதலுக்குக் காரணமான வர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்படுகிறது.

முதலில் மத்திய துனீஸில் சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலிசாரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டதாக துனீசி-ய உள்துறை அமைச்சு தெரிவித்தது.

சிறிது நேரம் கழித்து, அல்=கல்ஜார்னி மாவட்டத்தில் உள்ள போலிஸ் நிலையத்துக்கு அருகில் தமது உடலில் பொருத்தப்பட்டிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தார். நான்கு பேர் காயமுற்றனர்.