மலேசியா: சாஹித் மீது குற்றச்சாட்டு

மலேசியா: சாஹித் மீது குற்றச்சாட்டு

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் அகமது சாஹித் ஹமிடிக்கு எதிராக மேலும் 33 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. 42.76 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள வெளிநாட்டு விசா முறை தொடர்பான ஊழலில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழல் குற்றத்தை டாக்டர் அகமது சாஹித் 2014ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் புரிந்ததாக நம்பப்படுகிறது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். அவர் 500,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 29ஆம் தேதி நடைபெறும்.