பைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைக்குப் பெயர் 'இந்தியா'

பைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைக்குப் பெயர் 'இந்தியா'

1 mins read
3dec0cd4-f5db-4435-8a2c-db56cbf87939
-

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு பைக்குள் ஆதரவற்று விடப்பட்ட குழந்தையை போலிசார் கண்டுபிடித்துள்ளனர். குழந்தையின் தாயாரைத் தேடிவரும் போலிஸ் அதிகாரிகள் அதன் காணொளியை இணையத்தில் பதிவேற்றினர்.

ஜூன் ஆறாம் தேதி குழந்தை அழும் சத்தம் நடுக்காட்டில் ஒலித்ததாக அவ்வழியாகச் சென்ற ஒருவர் போலிசாரிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அங்கு வந்து குழந்தையைக் காப்பாற்றினர். அந்தப் பெண் குழந்தைக்கு 'இந்தியா' என்ற பெயரை வைத்துள்ள அதிகாரிகள், குழந்தை நலமாக இருப்பதாகக் கூறினர். இந்தக் குழந்தையின் நலனுக்கான வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் சமூக ஊடகத்தில் பலரும் 'இந்தியா'வுக்காக வெளிப்படுத்தி வருகின்றனர்.

'இந்தியா' என்ற பெயரை மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு இருநூற்றாண்டுகளுக்கு முன்னரே வழங்கப்பட்டு வருகிறது.