சீனா, இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பாய்ச்சல்

ஜப்பானின் ஒசாக்கா நகரில் இன்று தொடங்கவிருக்கும் இரண்டு நாள் ஜி20 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்கா-=சீனா இடையிலான வர்த்தகப் பூசலே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று வா‌ஷிங்டனில் இருந்து கிளம்பினார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். அதற்குமுன், சீனாவையும் இந்தியாவையும் அவர் கடுமையாகச் சாடியதன் மூலம் மாநாட்டில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ஓராண்டாக அமெரிக்கா--=சீனா இடையே வர்த்தகப் பூசல் நீடித்து வரும் நிலையில், நட்பு நாடான இந்தியாவையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

"பல்லாண்டு காலமாகவே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதித்து வருகிறது. இப்படி இருக்க, அண்மையில் அந்த வரியை மேலும் உயர்த்தி அறிவித்துள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வரி உயர்வை இந்தியா திரும்பப்பெற வேண்டும்," என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கு வழங்கிவந்த வர்த்தக

சலுகைகளை அமெரிக்கா இம்மாதத் தொடக்கத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, 28 அமெரிக்கப் பொருட்களுக்கான சுங்க வரியை இந்தியா உயர்த்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா = அமெரிக்கா இடையே 2018ஆம் ஆண்டில் US$142.1 பில்லியன் மதிப்புக்கு வர்த்தகம் நடைபெற்றது.

முன்னதாக, சீனாவின் பொருளியல் வளர்ச்சி இறங்குமுகத்தில் இருப்பதால் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு

செய்துகொள்ள அந்நாடு விரும்புகிறது என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

கடந்த மே மாதம் அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, அவ்விரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்தி அறிவித்தன.

சீனா, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கான வரியை 10 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக உயர்த்தி அறிவித்தார் டிரம்ப். இதற்குப் பதிலடி தரும் விதமாக, சீனாவும் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்குச் சுங்க வரியை உயர்த்தியது.

இந்நிலையில், சீனாவுடன் உடன்பாடு எட்டப்படாவிடில் மேலும் 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு வரிகளை உயர்த்த வேண்டியிருக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இப்படி இருக்க, ஜி20 மாநாட்டில் அமெரிக்கா- = சீனா இடையே வர்த்தக உடன்பாடு எட்டப்பட சாத்தியம் குறைவாகவே உள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சிக்கலான விவகாரங்களுக்குத் தீர்வுகாண போதிய கால அவகாசம் இராது என்பதே அதற்கு அவர்கள் கூறும் காரணம். மாறாக, வர்த்தகப் பூசலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பேச்சுவார்த்தையைத் தொடரலாம் என்ற முடிவுக்கு அந்நாடுகள் வரலாம் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே, அமெரிக்கா-வும் சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் பூசலைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளன என்று 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா-=சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட 90% நிறைவடைந்துவிட்டது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் மெனுச்சின் 'சிஎன்பிசி' செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கும் டிரம்ப், நாளை சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளார்.

ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பானின் ஒசாக்கா நகருக்குச் சென்ற சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்கு (நடுவில்) வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!