கடந்த ஆறு மாதங்களாகக் கோமாவில் இருந்த தாயார் ஆரோக்கியமான பெண் குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறார்.
கோத்தா பாருவைச் சேர்ந்த 36 வயது தாயார் கமாரியாவின் குழந்தை உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் கூறியதாக அவரது கணவர் ஃபைரோல் ரஹிம் மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இருந்தபோதும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. தாயாருக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது.

