ஜி20 உச்சநிலை மாநாட்டில் வெளிப்படையான வர்த்தகத்திற்கு உறுதி

ஜி20 உச்சநிலை மாநாட்டில் வெளிப்படையான வர்த்தகத்திற்கு உறுதி

1 mins read
60ebfc36-5e3d-42bb-9f68-a468d43896c8
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சநிலை மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாகச் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படம்: எஸ்பிஎச் -
Google News Preferred Icon

ஒசாகா: வெளிப்படையான, பார­பட்சமற்ற, சுதந்திரமான அனைத்­துலக வர்த்தகத்திற்கு உறுதி­பூண்டுள்ளதாக, ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஸி ஜின்பிங் பேசியபோது, சுதந்திர, அனைத்­துலக வர்த்தகத்திற்கு மாறாக, சில வளர்ச்சியடைந்த நாடுகள் தன்னைப்பேணித்தனக் கொள்கை­களைப் பின்பற்றுவதாகக் குறிப்­ பிட்டார்.

இந்தப் போக்கால் உலக வர்த்­தக ஒழுங்கு சீர்குலைவதாகவும் உலக நாடுகளின் பொதுவான நலன்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

உலகளவில் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துவதாக திரு ஸி கூறினார். பலதரப்பு வர்த்தக விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் வலியுறுத்தினர்.

மின்னிலக்கப் பொருளியல் பற்றிக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 5ஜி தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மின்னிலக்க வர்த்தகத்தை மட்டுப்படுத்தும், அறிவுசார் சொத்துடைமை பாதுகாப்பை மீறும் கொள்கைகளை அமெரிக்கா எதிர்ப்பதாகவும் அவர் குறிப்­ பிட்டார்.