அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் முத்தரப்பு பேச்சுவார்த்தை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இருதரப்புப் பேச்சு­வார்த்தை நடத்தினர். வர்த்தகம், ஈரான் பிரச்சினை, 5ஜி தொழில்­நுட்பம், பாதுகாப்புத்துறை ஒத்து­ழைப்பு உள்ளிட்ட விவகா­ரங்கள் குறித்து இரு தலை­வர்களும் விவாதித்தனர்.

இந்தியாவும் அமெரிக்காவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கமான நட்பு நாடுகளாக மாறியிருப்ப­தாக­வும் ராணுவம் உள்ளிட்ட துறை­களில் இணைந்து பணியாற்ற உள்ள­தாகவும் திரு டிரம்ப் கூறினார்.

இந்திய மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி அமோக வெற்றி பெற்றதற்கும் அப்போது அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு மோடி பொருத்த­மானவர் என்று குறிப்பிட்ட டிரம்ப், அனைவரையும் ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டுள்ள மோடிக்கும் அவரது திறன்களுக்கும் கிடைத்த மிகச்சிறந்த பரிசு என்றும் பாராட்டினார்.

முதன் முதலில் மோடி பிரத­மராகப் பதவியேற்றபோது பல தரப்பினர் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்ததாகவும் ஆனால் அவர்கள் தற்போது ஒரேபக்கம் வந்திருப்பதாகவும் திரு டிரம்ப் கூறினார்.

வர்த்தக விவகாரங்களைப் பொறுத்தவரை, வர்த்தக முன்னு­ ­ரிமை நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு ரத்துச் செய்த பிறகு, இந்தியா தரப்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக டிரம்பிடம் மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.

அவை நடந்து முடிந்தவை என்றும் பிரச்சினைகளை எப்படித் தீர்த்துக்கொள்வது என்பது பற்றியே இனி சிந்திக்க வேண்டும் என்றும் மோடி கூறியபோது அதையும் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

இதனிடையே, இந்தியப் பிர­தமர், அமெரிக்க அதிபர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்த­தாக, டிரம்ப்பின் மகள் இவாங்கா கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜி20 மாநாட்டிற் கிடையே ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேவை திரு மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இரண்டாவது முறை பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடிக்கு திரு அபே மீண்டும் வாழ்த்து தெரி­ வித்தார்.

விரையில் இந்தியா­வுக்குத் தான் அதிகாரத்துவப் பயணம் மேற்­கொள்ள உள்ள­தாகவும் திரு அபே கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!