சிட்னியில் மோசமான பனிமூட்டம்: விமானச் சேவைகள் பாதிப்பு

சிட்னியில் மோசமான பனிமூட்டம்: விமானச் சேவைகள் பாதிப்பு

1 mins read
131c8a64-32f0-4268-8f17-73e65bee1b7c
சிட்னியை மூடிய பனிமூட்டம். இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ் -

சிட்னி: சிட்னியில் மிக மோசமான பனிமூட்டம் ஏற்பட்டதால் அந்நகரத்தின் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் மற்றவை தாமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை 6 மணி அளவில் 10 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அனைத்துலக விமானச் சேவைகள் தாமதிக்கப் பட்டதாகவும் சிட்னி விமான நிலையத்தின் செய்தியாளர் கூறினார்.

நேற்று நண்பகல் நேரத்தில் பனிமூட்டம் கலைந்தபோதிலும் அனைத்துலக, உள்நாட்டு விமானச் சேவைகள் ஒரு மணி நேரத்துக்குத் தாமதிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது.