அமெரிக்காவுடன் வர்த்தகச் சமநிலைக்கு வியட்னாம் முயற்சி

அமெரிக்காவுடன் வர்த்தகச் சமநிலைக்கு வியட்னாம் முயற்சி

1 mins read

ஹனோய்: வியட்னாம் வர்த்தகக் கொள்கைகளைத் தவறாகப் பயன் படுத்துவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 39.5 பில்லியன் அமெரிக்க டாலர் உபரியைக் குறைக்க மேலும் அதிக மான அமெரிக்கப் பொருட்களை வியட்னாம் வாங்குகிறது.

"அமெரிக்காவுடனான வர்த்தகச் சமநிலையை மேம்படுத்த வியட்னாம் பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது," என்று வியட்னாம் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, வியட்னாமில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கான நிபந்தனை களை வியட்னாம் மேம்படுத்தி வருகிறது.