பெட்டாலிங் ஜெயா: தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்து களுக்கு மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா பதிலடி கொடுத்துள்ளார்.
"ஊழலை எதிர்ப்பதே எனது இலக்கு. அதற்குத்தான் முன்னுரிமை தருகிறேன். எனது சீருடையில் இருக்கும் பதக்கங் களும் பட்டைகளும் எனக்கு முக்கியமல்ல," என்று அவர் கூறினார்.
அண்மையில் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடாம் அவரை நையாண்டி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பதவி ஏற்று ஒரு மாதம்கூட ஆகாத நிலையில் லத்தீஃபா கோயாவின் சீருடையில் எப்படி இவ்வளவு பதக்கங்கள் உள்ளன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டப்படி தலைமை ஆணையர் தமது சீருடையில் அணிய வேண்டிய பதக்கங்களையும் பட்டைகளையும்தான் தாம் அணிவதாக லத்தீஃபா கோயா கூறினார்.
"இந்தப் பதக்கங்களையும் பட்டைகளையும் என் சீருடையில் நான் கட்டாயம் அணிய வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தபோதிலும் முதலில் நான் அணிந்திருந்த பட்டைகளில் சில முரண்பாடுகள் இருந்தன. அவை உடனடியாக சரிசெய்யப்பட்டு விட்டன," என்று அவர் நேற்று கூறினார். சீருடையில் உள்ள பட்டைகளை அரண்மனைகளில் வழங்கப்படும் பதக்கங்கள் மற்றும் பட்டங்களுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. எனது பதவிக்கு ஏற்ப அணிய வேண்டியவற்றை நான் எனது சீருடையில் அணிகிறேன்.
"உண்மையைச் சொல்லப் போனால் பதவிகளைக் காட்டும் பதக்கங்கள், பட்டைகள் குறித்து இப்போதுதான் நான் கற்றுக் கொள்கிறேன். பதவி ஏற்றதி லிருந்து மிக மோசமான ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் குறியாக இருக்கிறேன். எனது சீருடையில் உள்ள பதக்கங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை," என்றார் லத்தீஃபா கோயா.

