நலமாக இருக்கிறேன்: உடல்நடுக்கத்துக்குப் பிறகு மெர்க்கல்

நலமாக இருக்கிறேன்: உடல்நடுக்கத்துக்குப் பிறகு மெர்க்கல்

1 mins read

ஒசாகா: ஜப்பானில் நடைபெறும் ஜி20 உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க் கல் (படம்) தாம் நலமாக இருப்பதாகக் கூறியுள் ளார்.

சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக உடல்நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நலம் குறித்து பலர் அக்கறை தெரிவித்தனர்.

"திடீரென்று ஏற்பட்ட இந்த உடல்நடுக்கப் பிரச்சினை முழுமையாகப் போய்விடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

தமக்கு ஏற்பட்ட உடல்நடுக்கத்தைப் பற்றி விளக்கம் தருமாறு செய்தியாளர்கள் பிரதமர் மெர்க்கலைக் கேட்டனர். அது தொடர்பாக மருத்துவரை நாடியுள்ளாரா என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தமக்கு ஏற்பட்ட உடல்நடுக்கம் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை என்று 64 வயது டாக்டர் மெர்க்கல் தெரிவித்தார்.