லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனின் முக்கிய சின்னமான 'டவர் பிரிட்ஜ்' கட்டப்பட்டு 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. 'டவர் பிரிட்ஜின்' 125 ஆண்டு விழா வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது.
'டவர் பிரிட்ஜ்' கட்டப்படுவதற்கு முன்பு அதற்காகப் பல வடிவமைப்புகள் முன்வைக்கப்பட்டன. விசித்திரமாக இருந்த வடிவமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தேம்ஸ் நதியில் செல்லும் பெரிய படகுகளுக்கு வழிவிடும் வகையில் 'டவர் பிரிட்ஜ்' திறந்துவிடப்படும். பெரிய படகுகள் சென்றதும் பாலம் மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டு வரப்படும். இந்தப் பாலம் உலகப் புகழ் பெற்றது.
"டவர் பிரிட்ஜ் கட்டப்படுவதற்கு முன்பு அதற்காகப் பல்வேறு வடிவமைப்புகள் முன்வைக்கப்பட்டன. சில வடிவமைப்புகள் விசித்திரமாக இருந்தன. அருமையான, புத்தாக்கமிக்க வடிவமைப்புகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
"சில வாகன நிறுத்தும் இடங்களில் இருக்கும் சுற்றி சுற்றி செல்லும் சாலைகள் போல தேம்ஸ் நதியின் இரு கரையோரங்களில் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மிக உயரமான பாலங்களும் வடிவமைக்கப்பட்டன. ஆனால் பாலம் மேல் ஏறுவதற்கு முன்பே வண்டிகளை இழுத்துச் செல்லும் குதிரைகள் சோர்வடைந்துவிடும் என்பதற்காக அந்த வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை," என்று 'டவர் பிரிட்ஜ்' நிர்வாகத் தலைவர் கிறிஸ் எர்லி தெரிவித்தார்.

