இலங்கையில் மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

இலங்கையில் மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

2 mins read
Google News Preferred Icon

இலங்கையில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரண தண் டனையை அமல்படுத்தவுள்ள அதி பர் மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு எதிராகப் பல திசைகளி லிருந்து எதிர்ப்புகள் வந்த வண் ணம் உள்ளன.

இத்தனை ஆண்டுகள் கழித்து மரண தண்டனையை மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவர சிறிசேன அனுமதி வழங்கியுள் ளதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத் துடன் போராட்டங்களும் நடை பெற்று வருகின்றன.

கொழும்பில் உள்ள வெலிகடை சிறைச்சாலைக்கு எதிராக முதல் போராட்டம் நடைபெற்றது. மரண தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்தைக் கைவிடுமாறு முழக்கமிட்டு அதன் தொடர்பான வாசகங்கள் கொண்ட பதாகை களைச் சமூக ஆர்வலர்கள் கையில் ஏந்தி நின்றனர்.

இதற்கிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதன் தொடர்பில் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

போதைப்பொருளுடன் தொடர் புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என் றாலும் அதற்காக மீண்டும் மரண தண்டனையை நடப்புக்குக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிடப்பட்டது. அத் துடன் மரண தண்டனையை முற்றாக ஒழிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தியமைக்க அனைத்து முயற்சிகளையும் நாடாளுமன்றம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மரண தண் டனையை நிறைவேற்றும் இலங்கை அதிபரின் தீர்மானத்திற்கு இடைக் கால தடை விதிக்குமாறு இலங்கை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் அடுத்த ஏழு நாட்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என இலங்கை சிறைச்சாலைகளின் ஆணையாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்குமுன் போதைப்பொருள் கடத்தியதன் தொடர்பில் நால் வரைத் தூக்கிலிட இலங்கை சிறைத் துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிபர் சிறிசேன, நால்வருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக புதன்கிழமை அறிவித் தார்.