ரசாயனக் கசிவால் சென்ற வாரம் பாசிர் கூடாங்கில் உள்ள 111 பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாணவர்கள் மீண்டும் பள்ளி திரும்பினர். ஆனால் பள்ளியில் இருந்த சில மணிநேரத்திலேயே பலருக்கும் மூச்சுத்திணறல், மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.
இவ்வாறு 15 பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 130 மாணவர் களும் மூன்று ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் 30 பேர் மருந் தகங்களுக்குக் கொண்டு செல் லப்பட்டனர். நேற்றிரவு ஒன்பது மணி யளவு வரை கிடைத்த தகவலின் படி இந்த அறிகுறிகள் ஏற்பட்டதற்கான காரணம் தெரி விக்கப்படவில்லை.
இதற்கிடையே பாசிர் கூடாங் வட்டாரத்தின் காற்றுத் தரம் ஆரோக்கியமான அளவில் இருப் பதால் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என்று மாநில சுகாதார, கலாசார, மரபுடைமைக் குழுவின் தலைவர் முகம்மது குஸான் கூறினார்.
பாதிப்பு அறிகுறிகள் தென் பட்டோர் பெரும்பாலும் மூன்றாம், நான்காம் மாடியில் உள்ள வகுப் பறைகளில் இருந்தவர்கள் என் பதால் மாணவர்களை இனி கீழ்மாடி வகுப்பறைகளுக்கு மாற்ற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாசிர் கூடாங்கில் ரசா யனக் கசிவு சம்பவம் ஏற்பட்ட தைத் தொடர்ந்து சென்ற செவ்வாய்க்கிழமையிலிருந்து மூன்று நாட்களில் மொத்தம் 475 கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் தொழில்துறை களின் செயல்பாட்டினால் பாசிர் கூடாங் வட்டாரத்தில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதா அல்லது பொறுப் பற்ற தனிநபர்கள் கழிவுகளைத் தவறான முறையில் வீசியதால் ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் அடையாளம் காண விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

