கோலாலம்பூர்: மலேசிய நிறுவனம் ஒன்று தயாரித்த போத்தல் நீருக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ள நிலையில் அது குறித்து மலேசிய சுகாதார அமைச்சு விசாரணை நடத்தும் என்று அந்நாட்டு சுகாதார துணை அமைச்சர் லீ பூன் சை கூறியுள்ளார். அந்த போத்தல் நீரில் நுண்கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நீருக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணை நடத்துவதற்கு மேலும் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் சொன்னார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொருட்கள் மலேசியாவிலும் விற்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டில் விற்கப்படும் அந்நிறுவனத்தின் பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவை சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார். அந்நிறுவனம் தவறு செய்திருப்பதாக தெரிந்தால் அந்நிறுவனம் மீது 1983 உணவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு லீ பூன் கூறினார்.
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட போத்தல் நீருக்கு தடை; அமைச்சு விசாரிக்கும்
1 mins read

