பெட்டாலிங் ஜெயா: மலேசிய பொருளியல் விவகாரத் துறை அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்தி பேசப்படும் ஆபாச காணொளி விவகாரத்தில் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று முகம்மது ஹாஸிக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆபாச காணொளியில் காணப்படும் இரு ஆண்களில் ஒருவர் நான்தான் என்பதை ஒப்புக்கொண்ட ஹாஸிக், அந்த காணொளியில் காணப்படும் மற்றொரு ஆடவர் அஸ்மின் அலி என்று கூறியுள்ளார். "அந்தக் காணொளி விவகாரத்தில் நான் பலிகடாவாக ஆக்கப்பட்டேன்," என்று ஹாஸிக் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார். மக்கள் எதையும் முழுமையாக புரிந்துகொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் என்னை மட்டும் சாடுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை எதிர்காலத்தில் எளிதாக எதிர்கொள்ள தானும் தனது குடும்பத்தாரும் வசதி படைத்தவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

