28 மணி நேரத்தில் நால்வர் கத்தியால் கொலை

28 மணி நேரத்தில் நால்வர் கத்தியால் கொலை

1 mins read
0cc37efc-e18f-4779-90b1-8bd5d250e300
-

பிரிட்டனின் தலைநகர் லண்டனில் 28 மணி நேரத்திற்குள் நால்வர் குத்திக் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் போலிசார் இரவுபகலாக விசாரணை நடத்தி வருவதாக அந்நகர மேயர் சதிக் கான் தெரிவித்திருக்கிறார்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியான 26 வயது கெல்லி மேரி ஃபவ்ரெல். சனிக்கிழமை அதிகாலையில் கத்திக்குத்து காயங்களால் அவர் உயிரிழந்தார். ஈன்றெடுக்கப்பட்ட குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெவ்வேறு சம்பவங்களில் மூன்று ஆடவர்கள் கத்திக்குத்தால் மாண்டனர். அவர்களில் ஒருவர், தமது உயிருக்காகப் போராடி கொலைகாரனுடன் சண்டையிட்டபோதும் இறுதியில் அவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலைகளின் தொடர்பில் ஐவர் கைதாகியுள்ளனர்.

2018ஆம் ஆண்டில் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் மரணத்தை விளைவித்த 285 கத்திக்குத்துச் சம்பவங்கள் நடந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.