அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் முதலை ஒன்றின் வயிற்றுக்குள் மனித உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன 45 வயது மைக்கல் ஃபோர்டின் சடலப் பாகங்களை அதிகாரிகள் 'ஃபோர்ட் மீட்' என்ற நகரிலுள்ள கால்வாயில் கண்டுபிடித்ததாக 'லெட்ஜர்' என்ற செய்தித்தாள் தெரிவித்தது.
கால்வாயில் வசித்துவந்த அந்த முதலையைப் பிடித்துக் கொன்ற விலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், அதன் வயிற்றுக்குள் ஃபோட்டின் சடலப் பாகங்களைக் கண்டுபிடித்தனர்.ஃபோர்ட் நீரில் மூழ்கி மாண்டதாகவும் அதன் பின்னர் அவரது சடலத்தை முதலை கடித்துத் தின்றதாகவும் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
ஜூன் மாதத்தின் முற்பகுதியில் அதே மாநிலத்தில் ஐந்து வயது சிறுமி முதலையால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

