ஓடுபாதையிலிருந்து சறுக்கி வெளியேறிய இரண்டு இந்திய விமானங்கள்

ஓடுபாதையிலிருந்து சறுக்கி வெளியேறிய இரண்டு இந்திய விமானங்கள்

1 mins read
6dd6cf59-dfb8-45cd-a9c6-4e3ae3d8bf51
-

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிலிருந்து பறக்கவிருந்த ஏர் இந்தியா விமானம், திடீரென சறுக்கி ஓடுபாதையிலிருந்து பக்கவாட்டில் வெளியேறியது. இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் குஜராத்தின் சுரத் நகர விமான நிலையத்தில் 'ஸ்பைஸ் ஜெட்' விமானம் ஒன்று இதுபோலவே ஓடுபாதையைவிட்டு வெளியேறியது.

இரு சம்பவங்களிலும் எவரும் காயமடையவில்லை. இவ்விரு சம்பவங்களுக்கும் பலத்த காற்றும் மழையும் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.