மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்

1 mins read
a6f194c9-a071-4674-ada5-80bd02d5c1d6
-

கோலாலம்பூர்: மலேசிய நாடாளு­மன்ற உறுப்பினர்கள் அவர்களது சொத்து விவரங்களை அறிவிக்க வகை செய்யும் சிறப்பு மசோதாவை இன்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் அலுவலக அமைச்சர் லியு வூய் கியோங் தாக்கல் செய்தார்.

தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்­கப்பட்ட ஆளும் கட்சி, எதிர்­ கட்சியைச் சேர்ந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகள், செனட்டர் பதவி வகிப்பவர்கள் மட்டுமல்லாது அவர்களின் மனைவி, பிள்ளைகள், 21 வயதுக்கு மேற்பட்ட வாரிசுகள் ஆகியோரின் சொத்துடைமை கணக்குகளையும் அறிவிக்க இந்த மசோதாவில் சட்டவிதி இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் மூன்று மாதத்திற்குள் அனைவரும் சொத்து விவரங்களைச் சபாநாயகர் பரிந்துரைத்தபடி மாமன்னரிடம் சட்ட­ரீதியான பிரகடனம் செய்ய வேண்டும். இந்தச் சொத்து விவரங்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமும் (எம்ஏசிசி) வழங்கப்படும் என அமைச்சர் லியு விவரித்தார்.