அமெரிக்காவில் தீப்பிடித்து விழுந்து நொறுங்கிய விமானம்; 10 பேர் பலி

அமெரிக்காவில் தீப்பிடித்து விழுந்து நொறுங்கிய விமானம்; 10 பேர் பலி

1 mins read

டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த தனியார் விமான விபத்தில் அதிலிருந்த 10 பேரும் உயிரிழந்தனர்.

அந்தத் தனியார் விமானம் அடிசன் முனிசிபல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அங்குள்ள ஒரு கம்பத்தில் மோதித் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது.

இதனால் விமானத்தில் இருந்த எவரும் உயிர் பிழைக்க முடியவில்லை. இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.