ஜென்டிங் ஹாய்லண்ட்ஸ் மின்படிகள் தீப்பற்றின: யாருக்கும் காயமில்லை

ஜென்டிங் ஹாய்லண்ட்ஸ் மின்படிகள் தீப்பற்றின: யாருக்கும் காயமில்லை

1 mins read
3ab30fb3-eaad-407f-97d4-1cfaf385d3bf
-

ஜென்டிங் ஹாய்லண்ட்ஸில் ஜென்டிங் கிராண்ட் ஹோட்டலுக்கும் ஃபர்ஸ்ட் வோர்ல்டு ஹோட்டலுக்கும் இடையில் அமைந்திருந்த பலமாடி மின்படிகளில் நேற்று மாலை ஆறு மணியளவில் தீ மூண்டது. இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும், தீப்பற்றிய இடம் ஒதுக்குப்புறமாக இருப்பதால் உல்லாசத்தளம் பாதிப்படையவில்லை என்றும் ரிசோர்ட்ஸ் வோர்ல்டு ஜென்டிங் நிர்வாகத்தினர் அறிக்கையில் தெரிவித்தனர்.

"உல்லாசத்தள வருகையாளர்களைத் தீப் பாதுகாப்புக் குழுவினர் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றி, அப்பகுதியைச் சுற்றிலும் தடுப்பு போட்டனர்.

"பத்து நிமிடங்களுக்குள் தீயணைப்புப் படையினர் வந்து தீயை சட்டென அணைத்துவிட்டனர்," என்று அறிக்கை தெரிவித்தது.

உல்லாசத்தளம் வழக்கம்போல செயல்படுவதாகவும் அறிக்கை குறிப்பிட்டது. அலங்காரப் பிளாஸ்டிக் மலர்ச்செடிகள் மட்டுமே இருந்த நிலவனப்புப் பிரிவில் தீ மூண்டதாகவும், அது கட்டடத்திற்குப் பரவியதாகவும் பாஹாங் மாநிலத்தின் தீ, மீட்புப் பிரிவின் துணை இயக்குநர் முகம்மது சானி ஹருல் தெரிவித்தார். "கட்டடத்தின் 10 விழுக்காடு பகுதி மட்டுமே தீயால் பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டது," என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் சொன்னார்.