சபாநாயகராக விரும்பும் அதிபர் டுட்டர்டேயின் மகன்

சபாநாயகராக விரும்பும் அதிபர் டுட்டர்டேயின் மகன்

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸ் நாடாளு மன்றத்தின் கீழவை சபாநாயகரா வதற்கு அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயின் மகன் விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற 44 வயது பாவ்லோ டுட்டர்டே சபாநாயகருக்கான மூன்றாண்டு பதவிக்காலத்தைப் பகிர்ந்துகொள்ள பரிந்துரை செய்துள்ளார்.

"இது இரண்டு பேர் தொடர் பானதல்ல. இது நமது நாடு பற்றியது. நாடாளுமன்றத்தை ஒழுங்காக வழிநடத்தக்கூடியவரை அடையாளம் காண வேண்டும்," என்றார் பாவ்லோ டுட்டர்டே.