மணிலா: கடந்த வாரம் பிலிப்பீன்ஸில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அடை யாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் தமது மகன் என்றும் அவர் பிலிப்பீன்ஸ் நாட்டவர் என்றும் மாது ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த மாது கூறியதை அடுத்து, கடந்த வாரம் நிகழ்ந்த சம்பவம் பிலிப்பீன்ஸில் முதல் முறையாக உள்ளூர் போராளிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் என விசாரணை அதிகாரிகள் முடிவெடுக்கக்கூடும் என்று அறியப் படுகிறது.
அடையாளம் காணப்பட்டுள்ளவர் 23 வயது நோர்மன் லசுகா. கடைசி யாக அவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததாக அந்த மாது கூறினார்.
தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்களும் பொதுமக்களில் மூவரும் மாண்டனர்.

