ஜகார்த்தா: அல் காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகொண்ட ஜாமியா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பின் தலைவரை இந்தோனீசிய போலிசார் கைது செய்துள்ளனர்.
தமது பயங்கரவாத அமைப்புக்கு பாரா விஜயாந்தோ ஆட்களைச் சேர்த்ததாகவும் மற்ற தீவிரவாத அமைப்பு களுடன் பயிற்சி செய்ய அவர்களை சிரியாவுக்கு அனுப்பிய தாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
அவருடன் தொடர்புடைய குறைந்தது நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரா விஜயாந்தோ 2002ஆம் ஆண்டு பாலி குண்டுவெடிப்புக்குக் காரணமாக இருந்த அபு பக்கர் பஷிரின் மாணவர் என்று கூறப் படுகிறது.
கடந்த சனிக்கிழமையன்று அவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

