சிட்னியில் பயங்கரவாத சதி முறியடிப்பு

சிட்னியில் பயங்கரவாத சதி முறியடிப்பு

2 mins read
e4e4945d-88b2-402c-939b-934ec6f11da7
சிட்னியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடிச் சோதனை நடத்திய போலிஸ் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பயங்க ரவாத தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்த மூன்று ஆடவர்களை சிட்னியில் கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலியப் பயங்கரவாத தடுப்பு போலிஸ் படை தெரி வித்துள்ளது. இதன்மூலம் ஆஸ்தி ரேலியாவில் நிகழவிருந்த பயங்க ரவாத தாக்குதல் முறியடிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள அரசாங்க கட்டடங்கள், தூதர கங்கள் ஆகியவற்றைக் குறி வைத்து தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டி ருந்ததாக அதிகாரிகள் கூறினர். அமெரிக்காவின் நட்பு நாடான ஆஸ்திரேலியாவில் இதுவரை 16 பயங்கரவாத சதிகளை முறியடித் திருப்பதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு 20 மற்றும் 23 வயது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களாக இருப்பதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. கைது செய்யப் பட்ட 20 வயது ஆடவர் சிட்னியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தாகவும் திட்டம் ஆரம்பநிலையில் இருந்ததாகவும் போலிசார் தெரி வித்தனர்.

"போலிஸ் நிலையங்கள், தற்காப்பு தொடர்பான இடங் கள், தூதரகங்கள், நீதிமன்றங் கள், தேவாலயங்கள் ஆகிய வற்றைத் தாக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

"ஆஸ்திரேலியாவிலேயே இருந்துகொண்டு எங்களுக்கே தீங்கு விளைவிக்க எண்ணம் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து இருந்து வருகி றார்கள். இத்தகையோர் இஸ் லாமிய சமயக் கோட்பாட்டின்படி நடப்பவர்கள் அல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அவர்கள் குற்றவாளிகள்.

"வெறுப்புணர்வையும் பயங் கரவாதத்தையும் பிரதிநிதிப்பவர் கள்," என்று ஆஸ்திரேலிய போலிஸ் படையின் உதவி ஆணையர் இயன் மெக்கார்ட்னி செய்தியாளர்களிடம் தெரிவித் தார். மூவருக்கும் எதிராகப் போதுமான ஆதாரங்களைத் திரட்டிய பிறகே அவர்களைக் கைது செய்ததாக போலிசார் கூறினர். ஆனால் எத்தகைய ஆதாரங்கள் கிடைத்தன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் மீது நலத்திட்ட மோசடி குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது. அவருக்கு 30 வயது. குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மூவரின் பெயர்களை ஆஸ்தி ரேலிய போலிசார் வெளியிட வில்லை.

சிட்னியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆட வரை கடந்த ஆண்டிலிருந்து கண்காணித்து வருவதாக போலிசார் கூறினர்.

அவரது லெபனான் பயணம் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்ததாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

ஏனைய இருவருக்கும் தலா பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.