பெண்களைப் பற்றிய நகைச்சுவை கருத்துக்கு டலாய் லாமா மன்னிப்பு

பெண்களைப் பற்றிய நகைச்சுவை கருத்துக்கு டலாய் லாமா மன்னிப்பு

1 mins read
e56fa90f-5a21-4925-a6b8-704b4a3a1508
-

பெண்கள் பற்றி கூறிய தமது கருத்திற்காக திபெத்திய சமயத் தலைவர் டலாய் லாமா மிகவும் வருந்துவதாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்தது. 'டலாய் லாமா' பட்டத்தை அடுத்து ஏற்கவிருப்பவர் பெண்ணாக இருக்கலாமா என்று பிரிட்டிஷ் வானொலிப் பேட்டியாளர் ஒருவர் கேட்டதற்கு, அந்த 83 வயது சமயத் தலைவர் "கண்டிப்பாக. அவர் அழகாக இருந்தால் அதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகம்," என்று நகைச்சுவையாக பதிலளித்தார். ஆனால் அவரது கருத்து கண்டனங்களை ஈர்த்தது.

இந்தக் கண்டனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் டலாய் லாமாவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) அறிக்கை வெளியிட்டது. "டலாய் லாமா தமது வாழ்நாள் முழுதும் பெண்களை மோகப் பொருளாக மட்டுமே கருதும் போக்கை எதிர்த்து வந்தவர். பெண்களுக்குச் சம உரிமைகளையும் மரியாதையையும் கொடுக்கும் உலகளாவிய கருத்திணக்கத்தின் வளர்ச்சியையும் அவர் பாராட்டியிருக்கிறார்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.